விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு கொரோனா தொற்று...!


விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு கொரோனா தொற்று...!
x
தினத்தந்தி 18 May 2022 2:51 PM IST (Updated: 18 May 2022 2:51 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடந்து வீட்டிலேயே தனிமை தனிமைப்படுத்தி கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் ஆர். லட்சுமணன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். 3 நாட்களாகியும் காய்ச்சல் குணம் அடையாததால் அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினரையும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story