தஞ்சை மாவட்டத்தில் 2,065 பள்ளிகள் நாளை திறப்பு


தஞ்சை மாவட்டத்தில் 2,065 பள்ளிகள் நாளை திறப்பு
x

தஞ்சை மாவட்டத்தில் 2,065 பள்ளிகள் நாளை திறப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) 2,065 பள்ளிகள் திறக்கப்படுகிறது. தொடக்க நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1½ ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டது. தாமதமாக திறக்கப்பட்டதால் பள்ளிகளில் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

இதையடுத்து 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றது. இறுதியாக 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மே மாதம் 31-ந்தேதி முடிவடைந்தது. இதர வகுப்புகளுக்கு ஏப்ரல், மே மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றாலும் மே இறுதியில் தான் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாளை பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 13-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 65 பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.

1 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி நடைபெறுகிறது. 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி கடந்த 2 நாட்களாக பள்ளிகள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றிக்கையும் அனுப்பி உள்ளது. அந்த சுற்றிக்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தொடக்க நாளில் புத்தகங்கள்

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள புத்தக சேமிப்பு மையங்களில் இருந்து வாகனங்களில் புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் சேர்க்கையும் நாளை முதல் நடைபெற உள்ளது.


Next Story