போலீசாரின் சோதனையில் 21 போ் கைது
ஆரணி சகர காவல் நிலைய பகுதிகளில் போலீசார் சோதனையில் 21 போ் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டதில் கஞ்சா, புகையிலை, லாட்டரி சீட்டு விற்றதாக 9 பேர், சாராயம், மது விற்றதாக 5 பேர், சூதாடிய 2 பேர் என மொத்தம் 19 வழக்குகளில் 21 பேரை கைது செய்தனர்.
மேலும் கடந்த 4 மாதங்களில் ஆரணி உட்கோட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 287 வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story