ரூ.21 லட்சம் நிலம் மீட்பு


ரூ.21 லட்சம் நிலம் மீட்பு
x

நெல்லை அருகே ரூ.21 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் குமாரசாமி நகரை சேர்ந்தவர் நெல்லைகுமாரி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 44 சென்ட் இடம் நெல்லை அருகே சுத்தமல்லி முதுமொத்தான்மொழி பகுதியில் உள்ளது. இந்த இடம் போலி ஆவணம் மூலம்‌ வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லைகுமாரி நிலத்தினை மீட்டுத்தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு அளித்தார். இதுபற்றி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள் பானு, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, நெல்லைகு மாரியின் ரூ.21 லட்சம் மதிப்பிலான 3 ஏக்கர் 44 சென்ட் நிலத்தை மீட்டனர். இதற்குரிய ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று நில உரிமையாளரிடம் வழங்கினார்.


Next Story