போராட்டம் நடத்த முயன்ற 21 பேர் கைது
போராட்டம் நடத்த முயன்ற 21 பேர் கைது
திருப்பூர்
அவினாசி
அவினாசி தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்கும் நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு போராட்டக்காரகள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்றும் போராட்டக்காரர்கள் தாலுகா அலுவலகம் வந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து விவரம் சேகரித்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இங்கு யாரும் இருக்கக்கூடாது வெளியேறுங்கள் என்றனர். இதனால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 21 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story