21 மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்ட சீர்
மாங்காட்டில் நடந்த காதணி விழாவிற்கு 21 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
திருமண நிகழ்ச்சி, திருமண நிச்சயதார்த்தம், குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களில் தாய் மாமன் முறை மிகவும் பிரபலமான ஒன்றாகும். அத்தகைய நிகழ்ச்சியில் அந்த கால பாரம்பரிய வழக்கமாக மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை தாய் மாமன் கொண்டு வரும் நிகழ்வு அரிதிலும் அரிதாகவே நடந்து வருகின்றது. அந்த மாதிரியான நிகழ்வு வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் இன்று காதணி விழாவில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு செய்யும் விதமாக, தாய் மாமன் முறை சீர்வரிசையாக 21 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களுடன் பின் தொடர முன்னால் வாணவேடிக்கை, செண்டை மேளதாளத்துடன் பூ, பழம், இனிப்பு, தட்டு தாம்பூலங்களை பெண்கள் சுமந்து வர நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் புடைசூழ தாய் மாமன் சீர்வரிசை பொருட்களை பாரம்பரிய முறையில் கொண்டு வந்தனர். இந்த நிகழ்வு வடகாடு மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.