திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவில் கடத்தப்பட்ட 211 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் சாக்லேட் பவுடருடன் கலந்து பவுடர் வடிவில் கடத்தப்பட்ட 211 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் சாக்லேட் பவுடருடன் கலந்து பவுடர் வடிவில் கடத்தப்பட்ட ரூ. 21.55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 3 சாக்லேட் பவுடர் டப்பாக்களில் சாக்லேட் பவுடருடன் கலந்து சாதுர்யமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பவுடரை கண்டுபிடித்தனர். தங்கத்தை தனியே பிரித்தெடுத்ததில் 211 கிராம் 24 காரட் தூய்மையான தங்கம் மீட்கப்பட்டது.
மேலும் அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில் 175 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ. 21.55 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story