போக்குவரத்து விதி மீறல்:நாகர்கோவிலில் ஒரே நாளில் 217 பேருக்கு அபராதம்


போக்குவரத்து விதி மீறல்:நாகர்கோவிலில் ஒரே நாளில் 217 பேருக்கு அபராதம்
x

நாகர்கோவிலில், ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 217 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில், ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 217 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகன சோதனை

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று போக்குவரத்து போலீசார் நாகர்கோவில் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 217 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் வைத்திருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அபராதம் விதிப்பு

மேலும் வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 8 இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டெம்போக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து பின்னர் அபராதம் விதித்தனர்.


Next Story