போலீசார் ரோந்து பணிக்கு கூடுதலாக 22 மோட்டார் சைக்கிள்கள்
நெல்லையில் போலீசார் ரோந்து பணிக்கு கூடுதலாக 22 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா 3 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரோந்து பணிக்காக நெல்லை மாநகர போலீஸ் கிழக்கு பகுதிக்கு 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மேற்கு பகுதிக்கு 12 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 22 மோட்டார் சைக்கிள்கள் கூடுதலாக நேற்று வழங்கப்பட்டது.
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் (கிழக்கு) சீனிவாசன் மற்றும் (மேற்கு) சரவண குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களை ரோந்து செல்லும் போலீசாருக்கு வழங்கினார்கள். மேலும் போலீசாரின் குறைகளை கேட்டனர்.
Related Tags :
Next Story