தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய   இந்து முன்னணியினர் 22 பேர் கைது
x
திருப்பூர்


உடுமலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் ைகது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி

இந்துமுன்னணியின் கலை, இலக்கிய மாநில செயலாளர் 'கனல்'கண்ணன் கைதுசெய்யப்பட்டதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார்அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நேற்று காலை உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தனர்.அவர்கள்'கனல்கண்ணன்' கைது செய்யப்பட்டதைக்கண்டித்து கோஷமிட்டபடி வந்தனர்.அவர்களுக்கு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்து முன்னணியினரை போலீசார் தடுத்துநிறுத்தினர்.

22 பேர் கைதுதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய

இந்து முன்னணியினர் 22 பேர் கைது

அப்போது இந்து முன்னணியினர் சிலர் திடீரென்று ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தபடி சாலையில் உட்கார்ந்து எழுந்திருக்க மறுத்தனர். அதனால் அவர்களை போலீசார் மள்ளுக்கட்டி இழுத்து கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த இந்து முன்னணியினர் 22 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சதாசிவம் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்து முன்னணியினரின் ஆர்ப்பாட்டத்தையொட்டி உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story