காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 22 போ் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 22 போ் காயம்
x

பெரிய ஏரியூரில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

காளைவிடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுக்கத்தூரை அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் காளைவிடும் விழா நேற்று நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் ராமலிங்கம், ஒடுகத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா தயாநிதி, ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், நாட்டாண்மை தசரதன், பாபு, கனகாச்சாரி, விஜயகுமார் மற்றும் விழாக் குழுவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து காலை 8 மணிக்கு விழா தொடங்கியது.

இதில் 250 காளைகள் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக விடப்பட்டன. இளைஞர்கள் தெருவின் இருபக்கங்களிலும் நின்று காளைகளை உற்சாகப்படுத்தினர்.

22 பேர் காயம்

அப்போது மாடுகள் முட்டயதில் 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறுகிய நேரத்தில் அதிவேகமாக ஓடிய காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.30 ஆயிரம் என 75 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரிய ஏரியூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story