22-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகை நகராட்சி பகுதியில் 22-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆணையர் தகவல்
நாகப்பட்டினம்
நாகை நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 8 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. எனவே நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் பாலம் வரை பிரதான சாலையில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அகற்றப்பட்ட அனைத்து பொருட்களும் நகராட்சியால் கையகப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story