சூதாடிய 22 பேர் கைது ரூ.1¼ லட்சம் பறிமுதல்


சூதாடிய 22 பேர் கைது ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:30 PM GMT (Updated: 23 Nov 2022 7:30 PM GMT)

பாலக்கோடு அருகே சூதாடிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. 14 மோட்டார் சைக்கிள்களும் சிக்கின.

தர்மபுரி

பாலக்கோடு:-

பாலக்கோடு அருகே சூதாடிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. 14 மோட்டார் சைக்கிள்களும் சிக்கின.

சூதாட்டம்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு துணை சூப்பிரண்டு சிந்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பாளையம் கிராமத்தில் அருள்பிரகாஷ் என்பவரின் வீட்டில் மங்காத்தா எனப்படும் வெட்டுஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

22 ேபர் கைது

அதில் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (வயது.42), முருகேசன் (35), தங்கதுரை (22), அருள் பிரகாஷ் (37), எக்காண்டஅள்ளியை சேர்ந்த முரளிதரன் (34), கார்த்தி (29), மூவேந்தர் (19), அன்பரசு (28), நமாண்டஅள்ளியை சேர்ந்த சண்முகம் (57), ஜெய்கணேஷ் (38), கூத்தாண்ட அள்ளியை சேர்ந்த சிதம்பரம் (33), ஓட்டர்தின்னை பகுதியை சேர்ந்த நாகராஜ் (32), அத்தி முட்லு பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் ெசய்யப்பட்டன. மேலும் 14 மோட்டார் சைக்கிள்களும் சிக்கின. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.


Next Story