ரூ.22 லட்சம் நிலம் மீட்பு
ரூ.22 லட்சம் நிலம் மீட்கப்பட்டது
நெல்லை டவுனை சேர்ந்த கண்ணன் என்பவர் 2006-ம் ஆண்டு ராமையன்பட்டி சிவாஜி நகரில் 15 செண்ட் நிலத்தை வாங்கினார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு கண்ணன் மனைவி அருணா அந்த இடத்தை பார்வையிட சென்றபோது அங்கு சிலர் டவர் அமைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர். அந்த நிலத்தை வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்ததில் நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருணா நிலத்தினை மீட்டுத்தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுத்தார். அவர் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார். நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை அருணாவிடம் வழங்கினர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.22 லட்சமாகும்.
இதேபோல் திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான 90 செண்ட் நிலம் விஜயநாராயணம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததையும் போலீசார் மீட்டு சரோஜாவிடம் ஒப்படைத்தனர்.