சாராய வேட்டையில் 22 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வேட்டையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் குடித்த 14 பேர் இறந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்தது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் 25 வழக்குகள் பதியப்பட்டு 336 லிட்டர் சாராயம், 4,550 லிட்டர் சாராய ஊறல், மது கடத்த பயன்படுத்தபட்ட 2 வாகனம் கைப்பற்றப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story