வீடு புகுந்து 22 பவுன் நகை, ரூ.4¾ லட்சம் கொள்ளை


விருதுநகர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 22 பவுன் நகை, ரூ.4¾ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்

விருதுநகர்

விருதுநகர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 22 பவுன் நகை, ரூ.4¾ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மொட்டை மாடியில் தூங்கினர்

விருதுநகர் அருகே உள்ள எண்டப்புலி கிராமத்தில் தெற்கு தெருவில் வசிப்பவர் ரமேஷ். பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி(வயது37) இவர் 100 நாள் வேலை திட்ட பயனாளி ஆவார். இந்தநிலையில் மாரீஸ்வரி, ரமேஷ் மற்றும் குழந்தைகள் வீட்டு மொட்டை மாடியில் படுத்து இருந்தனர்.

வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்ட நிலையில் மாரீஸ்வரி மற்றும் ரமேஷ் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டு கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

22½ பவுன் நகைகள்

பீரோவில் இருந்த ரூ.4 லட்சத்து 80 ஆயிரம், 22½ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரீஸ்வரி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் வீட்டிற்கு வெளியே தேடிப் பார்த்ததில் எந்த தடயமும் இல்லாத நிலையில் இது பற்றி சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story