ரூ.70 லட்சத்தில் 22 சூரியஒளி பம்பு செட்டுகள்


ரூ.70 லட்சத்தில் 22 சூரியஒளி பம்பு செட்டுகள்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான 22 சூரிய ஒளி பம்பு செட்டுகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பர்வையிட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான 22 சூரிய ஒளி பம்பு செட்டுகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பர்வையிட்டார்.

சூரியஒளி பம்பு செட்டுகள்

மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி, மகாராஜபுரம், திருமங்கலம், மாங்குடி ஆகிய கிராமங்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் பல்வேறு திட்டப்பணிகள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக மகாராஜபுரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி மூலம் இயங்கும் விவசாய பம்பு செட்டை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

ரூ.70 லட்சம் மதிப்பில்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 70 லட்சம் மதிப்பிலான 22 சூரியஒளி பம்பு செட்டுகளுக்கு மானியமாக ரூ.47 லட்சத்து 29 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.1 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிப்பிக்காளான் வளர்ப்பு குடிலையும், பின்னர், திருமங்கலத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் மாங்குடி கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்ட விவசாயியுடன் கலந்துரையாடினார்.

விவசாய செயலி

மயிலாடுதுறை வட்டாரம், ஆனந்தக்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தமிழக அரசின் அனைத்து திட்ட பயன்களையும் விவசாயிகள் பெற செயலி உருவாக்கப்பட்டதை விளம்பரபடுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரத்தை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதரன், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story