தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் குவிந்தன


தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் குவிந்தன
x

தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 220 மனுக்கள் குவிந்தன.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். முகாமில் மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணை செயலாளர் வெற்றிச்செல்வன் கொடுத்த மனுவில், "தேனி அல்லிநகரம் நகராட்கிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், "இந்திரா நகரில் ஆதிதிராவிடர் மக்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பிற நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து, உரிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story