மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டது


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டது
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பெறப்பட்டது.

குறைதீர்வுநாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டியும், கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story