சாலை விபத்துகளில் 224 பேர் சாவு
சாலை விபத்துகளில் 224 பேர் உயிரிழந்தனர்.
குண்டர் சட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 42 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 286 திருட்டு வழக்குகளில், 105 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த 204 சாலை விபத்துகளில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். 345 சாலை விபத்துகளில் 723 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போக்சோ வழக்குகள்
கடந்த ஆண்டு 69 போக்சோ வழக்குகளும், 7 பாலியல் பலாத்காரம் வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு கஞ்சா விற்ற வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 9 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 272 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 166 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 205 பதிவானது. கடந்த ஆண்டில் 128 ரவுடிகளில், 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக மரணம் தொடர்பாக 379 வழக்குகள் பதிவானது. இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.