ரூ.23 லட்சத்தில் நசுவினி காட்டாறு தூர்வாரும் பணி


ரூ.23 லட்சத்தில் நசுவினி காட்டாறு தூர்வாரும் பணி
x

துவரங்குறிச்சி ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் நசுவினி காட்டாறு தூர்வாரும் பணி நடந்தது.

தஞ்சாவூர்

கரம்பயம்:

துவரங்குறிச்சி ஊராட்சியில் ரூ.23 லட்சத்தில் நசுவினி காட்டாறு தூர்வாரும் பணி நடந்தது.

நசுவினி காட்டாறு

பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி ஊராட்சியில் நசுவினி காட்டாறு ஓடுகிறது. இந்த காட்டாறு மழைக்காலங்களில் அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை, கள்ளிக்காடு, துவரங்குறிச்சி, நாட்டுச் சாலை, வெண்டாக்கோட்டை, ஆத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு வடிக்காலாக பயன்பட்டு வருகிறது.

மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது விளைநிலங்கள், கிராமங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த காட்டாறில் இருந்து தண்ணீர் ராஜா மடம் வழியாக சென்று மல்லிப்பட்டினம் கடலில் கலக்கிறது.

புதர் மண்டி கிடந்தது

இந்த நசுவினி காட்டாற்றில் வருகின்ற தண்ணீரை விவசாயிகள் சாகுபடி செய்ய பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நசுவினி காட்டாற்றில் கோரை புட்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

இதனால் மழை காலங்களில் காட்டாறில் தண்ணீர் செல்ல முடியாமல் கிராமங்களுக்கு புகும் அபாயம் உள்ளது. காட்டாற்று செடிகள் கொடிகள் வளர்ந்து கழிவுநீர் வாய்க்கால் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஆற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தூர்வாரும் பணி

இதையடுத்து தமிழ்நாடு நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் நசுவினி காட்டாறு 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தூர்வாரும் பணியின் மூலமாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள வயல்களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் நசுவினி காட்டாறு மூலம் மல்லிப்பட்டினம் கடலில் கலந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story