மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம்வெளிநாட்டு பணம் பறிமுதல்


மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம்வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

தற்போது, வெளிநாட்டு பணம் கடத்தி செல்லும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த கடத்தல் சம்பவங்கள் நின்றபாடில்லை.

சவுதி ரியால்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் திருச்சியை சேர்ந்த ராம் பிரபு (வயது 39) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் ரூ.23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியாலை மலேசியாவுக்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story