வந்தவாசியில் இளைஞரை வழிமடக்கி ரூ.23 ஆயிரம் பறிப்பு
வந்தவாசியில் இளைஞரை வழிமடக்கி ரூ.23 ஆயிரம் பறிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் இளைஞரை வழிமடக்கி ரூ.23 ஆயிரம் பறிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசியை அடுத்த ஒலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன் (வயது 20). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று அதிகாலை பஸ்சில் வந்தவாசிக்கு திரும்பினார்.
அதன்பின் வந்தவாசியிலிருந்து ஒலப்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல் பாதிரி இருளர் குடியிருப்பு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் மணிகண்டனை மடக்கியுள்ளனர்.
பின்னர் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.23 ஆயிரம், செல்போன், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story