குறைதீர்வு நாள் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டது


குறைதீர்வு நாள் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டது
x

திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டது

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூ மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 230 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், உதவி ஆணையர் (கலால்) பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story