தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 238 பேர் காயம்


தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 238 பேர் காயம்
x

தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் 238 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

தீயணைப்புதுறையின் வடமேற்கு மண்டலத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த 7 மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.

பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எந்த வகையிலும் விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். எனினும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்ததால் தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்துகள் தொடர்பாக 29 அழைப்புகள் வரப்பெற்றன. அதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில் 238 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களின் 226 பேர் புறநோயாளியாகவும், 11 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர்.


Next Story