முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கிறது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்த 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் தங்கள் பெயரினை TN Sports ஆடுகளம் என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதன் பின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்திட வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 23--ந் தேதி கடைசிநாள் ஆகும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703463-ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.