24 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
வேடசந்தூரில் 24 பயனாளிகளுக்க தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேடசந்தூர், குஜிலியம்பாறை வட்டாரங்களை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேடசந்தூர் தாசில்தார் சக்திவேலன் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா வரவேற்றார். இதில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான 8 கிராம் தங்க நாணயங்களும், ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதி உதவியையும் காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் மணிமொழி, விரிவாக்க அலுவலர்கள் ஜெயா (வேடசந்தூர்), பொன்னி (வடமதுரை), பூங்கொடி (குஜிலியம்பாறை) மற்றும் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், முன்னாள் ஒன்றிய பொருளாளர் நாகப்பன், எரியோடு பண்ணை கார்த்திகேயன், தி.மு.க. பிரமுகர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.