24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிகள் 24 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தண்டராம்பட்டு
பள்ளி மாணவிகள் 24 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பாலியல் தொல்லை
திருவண்ணாமலை அருகில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ேமலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார்.
இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியருக்கு வலைவீச்சு
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் லட்சுமணனை தேடி வருகின்றனர்.