தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப்பணிதொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் 24 மணி   நேரமும் போலீசார் ரோந்துப்பணிதொடக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப்பணியை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கு 24 மணி நேரமும் மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்துப்பணியை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

ரோந்து வாகனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கவும் கூடுதலாக 21 மோட்டார் சைக்கிள் வாகன ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரோந்து வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போதை பொருள்

இந்த மோட்டார் சைக்கிள் ரோந்து பணி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் போலீஸ் துறையின் இலவச தொலைபேசி எண் 100, செல்போன் எண். 95141 44100 என்ற எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக மேற்படி ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கு செல்போன் எண். 83000 14567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேற்படி தொலைபேசி எண்களில் தகவல் தருபவர்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story