வேலூர் மாநகராட்சிக்கு சூரிய மின்சக்தி மூலம் ரூ.24 லட்சம் வருமானம்


வேலூர் மாநகராட்சிக்கு சூரிய மின்சக்தி மூலம் ரூ.24 லட்சம் வருமானம்
x

வேலூர் மாநகராட்சிக்கு சூரிய மின்சக்தி மூலம் ரூ.24 லட்சம் வருமானம் கிடைக்கிறது.

வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு சூரிய மின்சக்தி மூலம் ரூ.24 லட்சம் வருமானம் கிடைக்கிறது.

சூரிய மின்சக்தி

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மாநகராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம், பள்ளி கட்டிடங்களின் மேற்பகுதி என 116 இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சூரிய மின்சக்தி மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.24 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:-

ரூ.24 லட்சம் வருமானம்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருதம்பட்டில் சூரியமின்சக்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒருநாளைக்கு 3.6 மெகாவாட் மின்சாரம் மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலம் என 4.1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரம் மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாநகராட்சிக்கு மின்வாரியம் விதிக்கும் மின்கட்டணத்தில் இருந்து இதற்கான தொகை சுமார் ரூ.24 லட்சம் கழிக்கப்படுகிறது. மீதம் உள்ள தொகையை மட்டுமே மாநகராட்சி சார்பில் மின்வாரியத்துக்கு செலுத்துகிறோம். மேலும் பல்வேறு இடங்களில் சோலார் மின்தகடுகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story