விழுப்புரம் மாவட்டத்தில்மே தினத்தன்று 24 கடைகளுக்கு அபராதம்தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில்மே தினத்தன்று 24 கடைகளுக்கு அபராதம்தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மே தினத்தன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதியை மீறியதாக 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவின்பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டத்தின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதா? என்று 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

24 கடைகளுக்கு அபராதம்

இந்த ஆய்வின்போது கடைகள் மற்றும் நிறுவனங்களில் 16 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் ஆக மொத்தம் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


Next Story