திருமலையப்பபுரம்-கோவிந்தபேரி சாலையை சீரமைக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு


திருமலையப்பபுரம்-கோவிந்தபேரி சாலையை சீரமைக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருமலையப்பபுரம்-கோவிந்தபேரி சாலையை சீரமைக்க ரூ.2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கு பகுதியில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலையானது சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலையானது ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த சாலையை சீரமைக்க கோரி கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் முதல்-அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த சாலை சீரமைக்க கிராமப்புற சாலை மேம்பாட்டு நிதி ரூ.2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக பஞ்சாயத்து கூட்டமைப்பின் சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.



Next Story