சாலைகளை சீரமைக்ககோரி கூடலூரில் வருகிற 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம்-அனைத்து வணிகர் சங்கங்கள் அறிவிப்பு


சாலைகளை சீரமைக்ககோரி கூடலூரில் வருகிற 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம்-அனைத்து வணிகர் சங்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

நீலகிரி

கூடலூர்

நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

கூடலூர் சட்டமன்ற தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கூடலூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் ரசாக் பொருளாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கூடலூர் நகரில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூடலூரில் இருந்து கேரளா செல்லும் கீழ்நாடுகாணி மற்றும் தாளூர் செல்லும் சாலைகள் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். இதேபோல் வாகனநிறுத்த வசதி செய்து தர வேண்டுமென அனைத்து வணிகர்கள் விவாதித்தனர்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

தொடர்ந்து அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

கூடலூர் நகரில் வாகனங்கள் நிறுத்த போது இட வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த வழி இல்லை. இதேபோல் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கடைகள் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது,

மேலும் வணிகர்களுக்கும் வியாபாரம் பாதிக்கப்படுகிறது, எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை வியாபாரிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்றிடம் வழங்க வேண்டும். மேலும் சாலையோரம் வாகனங்களில் வைத்து பொருட்களை விற்பனை செய்யவும் தடுக்க வேண்டும். தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்து தர வேண்டும்.

24-ந் தேதி கடையடைப்பு போராட்டம்

இதேபோல் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் அனைத்து மிக மோசமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்ததன் அடிப்படையில் 15 நாட்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. எனவே 15 நாட்களுக்குள் இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வருகிற 24-ம் தேதி கூடலூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அனைத்து வணிகர்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story