சூதாடிய 25 பேர் கைது; கார், பணம் பறிமுதல்
காவேரிப்பட்டணம், ஓசூரில் சூதாடிய 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணம்
போலீசார் ரோந்து
கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குரும்பட்டி மோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடியதாக சம்பத், சின்னசாமி, பிரபுமது, பன்னீர்செல்வம், பாபு, ராமச்சந்திரன், சிவக்குமார், பாலமுருகன், சரவணன், சதீஷ், மஞ்சுநாதன் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 4 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
ஓசூரில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள அமீரியா பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஓசூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த அமீர் (44), கும்பாரபேட்டையை சேர்ந்த முருகன் (43) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.