கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
சோளிங்கர் ெரயில் நிலையத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சோளிங்கர் ெரயில் நிலையத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ெரயில் நிலையத்தில் நின்று செல்லும் ெரயில்களில் சிலர் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் ரெயில் வருவதற்கு சற்று முன் திடீரென அதிகாாரிகள் சோதனைக்கு வருவதை தெரிந்துகொள்ளும் கும்பல் அரிசி மூட்டைகளை ெரயில் நிலைய நடைமேடையிலேயே போட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
இந்தநிலையில் சோளிங்கா் ெரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ெரயிலில் ரேஷன் ஆரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளஞ்செழியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
25 மூட்டை பறிமுதல்
தகவலின் பேரில் நேற்று திடீரென சோளிங்கர் ெரயில் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ெரயிலில் கடத்துவதற்காக நடைமேடை அருகே முட்புதரில் 25 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமாா் 1½ டன் ரேஷன் அரிசியை பரிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாலாஜாபேட்டையில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது பறக்கும்படை தனி தாசில்தார் அலுவலக உதவியாளா்கள் சரத்குமார், பாலகிருஷ்ணன், பாணாவரம் கிராம உதவியாளா் வில்சன் ஆகியோா் உடனிருந்தனர்.