மலேசிய நாட்டு நாணயங்கள் 25 மூட்டை பறிமுதல்; எழும்பூரில் வாகன சோதனையில் சிக்கியது
எழும்பூரில் வாகன சோதனையில் மலேசிய நாட்டு நாணயங்கள் 25 மூட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை எழும்பூரில் உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது வேகமாக வந்த வேனை மடக்கி சோதனை போட்டனர். அந்த வேனில் மூட்டை, மூட்டையாக மலேசிய நாட்டு நாணயங்கள் இருந்தன. 25 மூட்டை நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேதம் அடைந்த அந்த நாணயங்களை உருக்கி விற்பனை செய்ய முடிவு செய்து வாங்கி வந்துள்ளனர். வேனில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை முடிந்த பிறகு இதில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story