கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகே 25 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகே 25 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

ஆக்கிரமிப்பு கடைகள்

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மருத்துவமனை அமைந்துள்ளதால், நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும், ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்காக ரூ.26 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவனையை ஒட்டியும், எதிரேயும் டீக்கடை, சிற்றுண்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகள், தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

அகற்றம்

தற்போது இந்த பகுதியில் மேம்பால பணிகள் மேற்கொள்ள உள்ளதாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், கடைகளை அகற்றிட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினர்.

கடைகள் அகற்றப்படாததால் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொக்லைன் வாகன உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக, ஆக்கிரமித்து கடைகள், தள்ளுவண்டிகள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story