2 நாட்கள் பெய்த கனமழையால் 25 வீடுகள் சேதம்


2 நாட்கள் பெய்த கனமழையால் 25 வீடுகள் சேதம்
x

திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பெய்த கனமழையால் 25 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பெய்த கனமழையால் 25 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 3 செ.மீ. அளவிற்கு மேலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக நன்னிலத்தில் 7 செ.மீ. மழை பெய்தது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் மீட்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்தது.

25 வீடுகள் சேதம்

மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, பேரிடர் மீட்புத்துறை, வேளாண்மை துறை மற்றும் பல துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்கள் பெய்த கன மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதி அளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.

இதேபோல் 2 ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் சேதம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

10 கால்நடைகள் சாவு

மேலும் 8 மாடுகள், 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த கனமழை காரணமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆறுகளில் நீரின் போக்கை தடுக்கும் வகையில் பரவியிருந்த ஆகாயத்தமாரை செடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழை பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு்ள்ளதாக மாவட்ட பேரிடர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story