மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.25½ லட்சம் உண்டியல் காணிக்கை
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் 25 லட்சத்து 51 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கமும், 110 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் மூலம் கிடைத்தது.
மதுரை
மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே புகழ் பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருப்பரங்குன்றம் துணை கமிஷனர் சுரேஷ், கூடலழகர் பெருமாள் கோவில் உதவி கமிஷனர் செல்வி ஆகியோர் தலைமையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் நடந்தது.
அதில் 25 லட்சத்து 51 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கமும், 110 கிராம் தங்கம், 159 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் மூலம் கிடைத்தது. மேலும் இந்த உண்டியல் எண்ணும் பணியை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story