அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் படுகாயம்


அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் படுகாயம்
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்

அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது

தஞ்சாவூரில் இருந்து அரசு பஸ் ஒன்று ராமநாதபுரம் வந்தது. பின்னர் அந்த பஸ் நேற்று இரவில் ராமேசுவரம் செல்வதற்காக 40 பயணிகளுடன் புறப்பட்டது. பெருங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்து அலறினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

25 பயணிகள் காயம்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் மற்றும் த.மு.மு.க ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. படுகாயம் அடைந்த 7 பெண்கள் உள்பட 25 பயணிகள் மீட்கப்பட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story