கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்


கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்
x

கும்பகோணம் அருகே இருவேறு கிராமங்களில் கதண்டு கடித்ததில் காயம் அடைந்த 25 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள அம்மன் குடி ஏழான்கட்டளை என்ற கிராமத்தில் பனை மரத்தில் கூடியிருந்த கதண்டுகள்(விஷ வண்டு) நேற்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்களை விரட்டி, விரட்டி கடித்து காயப்படுத்தியது. இதேபோல் கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் கிராமத்தில் உள்ள பழமையான மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் வெளிவந்து அந்த வழியே சென்ற பலரை கடித்து காயப்படுத்தியது. இதையடுத்து இந்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 16 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பிரபாகரன் தெரிவித்தார்.






Next Story