என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை


என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
x

அரக்கோணத்தில் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

என்ஜினீயர்

அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்தவர் யுகானந்தன் (வயது 43). சென்னையில் ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். யுகானந்தனும், அவரது மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், பெற்றோர்கள் காற்றோட்ட வசதிக்காக வீட்டிற்கு வெளியேயும் படுத்து தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. வெளியில் தூங்கும் யுகானந்தனின் பெற்றோர்கள் வீட்டிற்குள் வருவதற்காக அதிகாலை நேரத்தில் கதவை தாழ்பாள் போடாமல் சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வழக்கம் போல் யுகானந்தன் அதிகாலை வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு மீண்டும் தூங்க சென்றுள்ளார். காலை 6 மணியளவில் யுகானந்தத்தின் பெற்றோர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

25 பவுன் நகை திருட்டு

மேலும் பீரோ லாக்கரும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து யுகானந்தன் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story