வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு 'சீல்'


வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு சீல்
x

கொடைக்கானலில் வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கே.ஆர்.ஆர்.கலையரங்கம், ஏரிச்சாலை, அண்ணாசாலை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 900-க்கும் மேற்பட்ட கடைகளில் வாடகை பாக்கி ரூ.3 கோடியே 55 லட்சம் உள்ளது. இதனை செலுத்தக்கோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடைகளை நடத்துவோர் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அதிக நிலுவை தொகையை வாடகை பாக்கி வைத்துள்ள ஏரிச்சாலை, கலையரங்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் 25 கடைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் வாடகை பாக்கி வைத்திருப்போர் விரைவில் செலுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story