இறந்த 4 மூதாட்டிகள் குடும்பத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு சார்பில் தலா ரூ.25 ஆயிரம்


இறந்த 4 மூதாட்டிகள் குடும்பத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு சார்பில் தலா ரூ.25 ஆயிரம்
x

இறந்த 4 மூதாட்டிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரத்தை அமைச்சர் எ.வ.வேலு சார்பில் அதிகாரிகள் வழங்கினர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

இறந்த 4 மூதாட்டிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரத்தை அமைச்சர் எ.வ.வேலு சார்பில் அதிகாரிகள் வழங்கினர்.

வாணியம்பாடி ஜின்னா சாலை அருகே தனிநபரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி நாகம்மாள் (வயது 60), வள்ளியம்மாள் (60), ராஜாத்தி (62), மல்லிகா (75) ஆகிய 4 பெண்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்து போன குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்துள்ளார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு சார்பில், இலவச வேட்டி, சேலைக்காக டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு செலவிற்காக சொந்த பணத்திலிருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் உறவினர்களிடம் உடனடியாக வழங்க செய்தார். அதனை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்களிடம் மருத்துவமனையிலேயே வழங்கினர்.


Next Story