250 வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்


250 வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேட்டில் 250 வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம் அடைந்தன.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு சேனாதிக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது48). இவருடைய வீட்டு வளாகத்தில் 250 வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென இந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.அப்போது காற்று அதிகமாக வீசியதால் செந்தில்குமார் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த லோடு வேன், ஜெனரேட்டர், ஏர்கலப்பை, டிராக்டர் டிப்பர் ஆகியவையும் தீப்பிடித்து எரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 250 வைக்கோல் கட்டுகளும் எரிந்து சாம்பலானது. இதேபோல் லோடு வேன்,ஏர் கலப்பைகள், டிராக்டர்டிப்பர், ஜெனரேட்டர் எரிந்து சேதம் அடைந்தன.


Next Story