நரியம்பட்டில் நடந்த எருதுவிடும் விழாவில் 250 காளைகள் சீறிப்பாய்ந்தன
நரியம்பட்டில் நடந்த எருதுவிடும் விழாவில் 250 காளைகள் சீறிப்பாய்ந்தன
திருப்பத்தூர்
ஆம்பூர்
நரியம்பட்டில் நடந்த எருதுவிடும் விழாவில் 250 காளைகள் சீறிப்பாய்ந்தன
ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியில் எருது விடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் பாரதிஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் இருபுறமும் நின்று கண்டுகளித்தனர்.விழாவில் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை கண்டுகளிக்க ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story