வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பெண்கள் கைது ெசய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, புஷ்பா மற்றும் போலீசார் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில், ரெயில் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்தப்படுவதற்காக ரோஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிளாட்பாரத்தின் கடைசி பகுதியில் 10 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பெண்கள் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா மேட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி ஆனந்தி (வயது 65) மற்றும் லட்சுமி (40) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சிறு சிறு 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக ஆனந்தி, லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story