2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி போலீஸ் சோதனைச் சாவடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தை நிறுத்தாமல் டிரைவர் சென்றார். இதைதொடர்ந்து போலீசார் பிடிக்க முயன்றபோது டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் அந்த வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது அதில் 50 மூடைகளில் தலா 50 கிலோ எடையுள்ள 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story