கொள்ளிடத்தில் 2,521 கன அடி தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 2,521 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி
அந்தவகையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் 2,521 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல, காவிரி ஆற்றில் 3,305 கன அடியும், வெண்ணாற்றில் 3,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், 6-வது நாளாக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை அமைந்துள்ள பூதலூர் ஒன்றிய பகுதியில் கிளை வாய்க்கால்களிலும் நேற்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாயிகள் தவிப்பு
இதனால், கால்வாய் பாசன விவசாயிகள் நாற்று நட முடியாமல் தவித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் பூதலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லணை கால்வாய் பாசன பகுதியில் வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெறும். கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லாத தால் கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆகவே, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.