26 மூடை கடத்தல் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
26 மூடை கடத்தல் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
26 மூடை கடத்தல் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ கொண்ட 26 மூடை ரேஷன் அரிசி இருந்தது.
அதை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த அரிசி உரிமையாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த சண்முகராஜ் (வயது 34), வேன் டிரைவர் திருப்பதி வெங்கடேஷ் (31), தொழிலாளி செல்வகுமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோழி தீவனம்
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணாபுரம், சுந்தரபாண்டியபுரம் ஆகிய கிராம பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து வந்தது தெரியவந்தது.
சங்கரன்கோவிலில் உள்ள அரிசி அரவை ஆலைக்கு கொண்டு சென்று அரைத்து அதை கோழி தீவனத்திற்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.